எங்களின் முக்கிய நோக்கம்

இன்றைய உலகமக்களில் பெரும்பாலானோர் படும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், நோயைக் கண்டாலேயே இன்றைய உலகமக்கள் பதறிப்போய் உடனே கண்ட மருந்துகளை வாங்கி வயிற்றில் போட்டுவிடுகிறார்கள். அவ்வாறு கண்ட மருந்துகளை வயிற்றிலடைக்கக் கூடாது. முதலில் நோய் என்றால் என்ன? நோய் எனும் கிருமியானது மனித உடலில் எவ்வாறு உள்ளே வந்தது என்று ஆராய வேண்டும்.

நோய் ஏற்பட்டவுடனே மருந்து, மாத்திரைகளைத் தவிர்த்து ஏன் நோய் ஏற்பட்டிருக்கிறது என்று தீர ஆராய வேண்டும்.

இன்றைய உலகில் நோய் எனும் கிருமி மனித உடலில் உள்ளே வருவதற்கு பணம் படைத்தோர், ஏழை-எளியோர், ஆண்பாலர்-பெண்பாலர், மேல்தட்டு மக்கள்-கீழ்தட்டு மக்கள் என இதுபோன்ற எந்தப் பாகுபாடும் இல்லை. மனித உடலில் நோய் எனும் கிருமி உள்ளே வருவதற்கு பொதுவாக எவர் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உட்கொள்கிறாரோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலோ நோய் எனும் தீய கிருமி நம்மை மிக விரைவாகவே வந்து அழித்துவிடும் என்பது மட்டுமே இன்றைய நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

அதிநவீன நாகரீக உலகில் மற்றும் அறிவியல், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த இவ்வுலகில் நோய்வாகு பெறப்பட்ட ஒருவரை குணப்படுத்தி அவரை மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளாமல் ஆரோக்கியமாக வாழவைக்க முடியுமா? அல்லது பணம் படைத்தோர், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவியல் வல்லுநர்கள் போன்று எவரை ஒருவரையாவது 100 வருடம், 150 வருடம், 200 வருடம் என ஆரோக்கியமாக வாழ வைக்கமுடியுமா? அதற்கான முயற்சியில் பலநாடுகளும் ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கு பலனாக சாியான பதில்கள் கிடைத்தது என்றால் என்னுடைய பதில் என்பது கேள்விக்குறிதான் என்றே நான் கூறுவேன்?

நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆரோக்கியம் என்பது மருந்து, மாத்திரைகளை கொண்டது மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் மனம் என்பது நன்கு கூர்மையடைந்து ஆழ்ந்த சிந்தனைகளோடு (அமை – தியாக) அமைதியாக வாழும் வாழ்க்கை முறைகளைத்தான் நமது முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் என்கிறார்கள்.

பொதுவாக எவர் ஒருவர் இயற்கையின் விதிகளை மீறுகிறார்களோ, அவர்களுக்குத்தான் நோய் எனும் கிருமி மனித உடலில் பற்றிக் கொள்கிறது. அவற்றை நாம் மீண்டும் இயற்கையின் மூலமேதான் தீர்வு காண வேண்டும். அதைவிட்டு மருந்து, மாத்திரைகளை நாடுவதினால் என்ன பயன்?

பெண்களினுடைய பிரசவத்தின்போது கருப்பையில் இருக்கும் குழந்தையை வெளியேற்ற இயற்கை பொறுக்க முடியாத வலியைத் தருகிறது. அதுபோலத்தான் நோய் எனும் கிருமி மனித உடலில் வந்தால் அந்த நோய் எனும் அரக்கன் மனித உடலில் சில மாற்றங்களைக் கொடுக்கும். அதைக் கண்டு அஞ்சாமல் அதற்கான தீர்வை இயற்கையிடம் கிடைக்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் மனிதன் மட்டும்தான் ஆறறிவு கொண்ட ஜீவன் என்றும், மனிதனால் மட்டும்தான் பகுத்தறிய முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் மற்றும் மனிதன் மரணம் அடையும் இறுதி தருவாய் வரையிலும் ஆரோக்கியமாக வாழ நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் நாம் அனைவரும் இன்றைய அவசர உலகிலும், மாயை உலகிலும் எதை நோக்கி பயணிக்கிறோம்? அதேபோல இன்றைய அதிநவீன நாகரீகம் வளர்ச்சியடைந்த இவ்வுலகில் பெரும்பாலானோர் தன்னை அடிமையாக்கி அதிலிருந்து விடுபடமுடியாமல், அதற்கு தகுந்தாற்போல, வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டு அழிவை நோக்கி பயணிக்கிறோம். நாம் ஒன்றை மட்டும் சாியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் என்னவென்றால்

“கடவுள் படைத்த படைப்புகளில் எதுவும்
இன்று வரையிலும் மாறவில்லை”

ஆனால் கடவுளால் படைக்கப்பெற்ற மனித இனம் மட்டும்தான் தனக்கு தகுந்தாற்போல வாழ்க்கை முறைகளையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் செயற்கையாக மாற்றிக் கொண்டுள்ளோம். அதன் விளைவாக பலவிதமான நோய்கள் பெறப்பட்டு இன்னல்களையும், அவலங்களையும் எதிர் கொண்டு வருகிறோம்.

ஐந்தறிவு படைத்த விலங்குகள் எல்லாம் தனக்கு ஏற்படும் நோய்களுக்கு இயற்கையாகவே மருந்துகளை அதாவது இயற்கை மூலிகைகளைத் தேடிக் கொண்டு அதை உண்டு தனக்கு வரப்போகும் பிரச்சனைகளில் இருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள இயற்கையின் உதவியைத் தேடிக்கொள்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த மனித இனம் மற்றும் அறிவாற்றல் மிகுந்த மற்றும் பகுத்தறிவு கொண்ட மனித இனம் ஏன் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேடிச் செல்லவில்லை என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவ்வாறு எனக்குள் எழப்பட்ட கேள்விக்கு, நீண்ட தேடலிலும் முன்னோர்களின் வழிகாட்டுதலின் மூலமும் மற்றும் என்னுடைய குருமார்களின் போதனைகளின் அடிப்படையிலும் ஒரு முழுமையான ஆரோக்கியமான வாழ்வு என்பது கிடைக்கப்பெற நான் தேடிய தேடலில் முதல் வெற்றியை அடைந்துவிட்டேன். நான் அடுத்த நிலையை நோக்கி நகர்வதற்கு முன்னால், நான் அடைந்த வெற்றியும், என்னால் உணரப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த ஆரோக்கியமான வாழ்வு என்பது. தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறவேண்டுமென்ற நோக்கிலும், மற்றும் இன்றைய உலகில் பகுத்தறிவுள்ள மனிதர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், தன்னுடைய கவலைகள் எல்லாம் மறந்து வீரதீரரைப் போல தன்னுடைய மரணம் அடையும் இறுதி தருவாய் வரையிலும் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைக்கப்பறெ நமது முன்னோர்களாலும், என்னுடைய குருமார்களின் போதனைகளினாலும் பல நல்ல அறிவுரைகளையும் நூல்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றையெல்லாம் மீண்டும் புதுப்பிக்கவே இந்த புதுமுயற்சியாகும்.

1. மெய்ப்பொருள் காண்பது அரிது.
2. இயற்கையோடு இணைந்திடுவோம்
ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கிடுவோம்
3. ஆரோக்கிய வாழ்வு அனுதினமும்

நான் மேற்கூறிய இந்த இரண்டு புத்தகங்களுடன் இலவச இணைப்பாக மூன்றாவது புத்தகம் சேர்த்து 3 புத்தகங்கள் வழங்கப்படும்.

நான் உருவாக்கிய இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் நம்முடைய முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளும், மற்றும் உணவு முறைகளும், கலாச்சாரங்களும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைகள் என்பது இயற்கையோடு கலந்து இயற்கையோடு இயற்கையாக ஒன்றியே வாழ்ந்து வந்தார்கள். அதேபோல அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே இயற்கையின் மூலமே கிடைக்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாகவே நமது முன்னோர்கள் மரணம் அடையும் இறுதி தருவாய் வரையிலும் நோய்நொடியின்றி ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றை எல்லாம் மறந்த காரணத்தினாலேயே இன்றைய உலக மக்களில் பெரும்பாலானோர் பலவிதமான நோய் எனும் அரக்கனை கண்டு அஞ்சுகிறார்கள்.

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் மாபெரும் வெற்றி என்பது அவரவர்களுக்கு கிடைக்கப்பெறும் கல்வி, பொன், பொருள், புகழ், பதவி, உறவினர்கள், நண்பர்கள் இவைகள் அனைத்தும்தான் முழுமையான வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். நான் மேற்கூறிய இவைகள் அனைத்துமே ஒரு மாயை என்பதை உணராமல் இந்த அவசர உலகில் ஒரு போலியான வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் வெற்றியை ஒரு சில நபர்கள் மட்டுமே அடைகிறார்கள்.

இந்த மாயை உலகில் வாழ்க்கையின் முழுமையான வெற்றி என்பது இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அவருடைய மரணம் அடையும் இறுதி தருவாய் வரையிலும் எந்தவிதமான நோய்நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டு, இந்த அற்புத கலையை தன்னுடைய பின்வரும் சந்ததியினருக்கும் கற்றுக் கொடுத்தும், ஆரோக்கியமான வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைக்க வழிவகைகளை ஏற்படுத்துவதே இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.

இந்த புத்தகத்தின் மூலம் “தான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும்” என்ற ஆழ்ந்த சிந்தனைகளோடு இந்த புத்தகங்களை உலக மக்களுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த முழுமையான வெற்றி என்பது உலகமக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த மூன்று புத்தகங்களையும் முன்னோர்களின் ஆசீர்வாதத்துடனும், என்னுடைய குருமார்களின் போதனைகளின் படியும், என்னுடைய தாய், தந்தையாின் ஆசீர்வாதத்துடனும், என்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதரவோடும் இந்த ஆரோக்கியமான வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும் இந்த புத்தகங்களை உலக மக்களுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன்.

நான் இந்தப் புத்தகங்களில் கூறிய அனைத்து விஷயங்களும், நமது முன்னோர்களுடைய வழிகாட்டுதலின் போிலும், குருமார்களின் முறையான ஆலோசனைகளின் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது கிடைக்க நான் தேடிய தேடலில் எனக்கு கிடைக்க முதல் வெற்றி என்பதும் ,இந்த ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க என்ன வழி என்பதை என்னுடைய மனதார அறிந்து கொண்டு அடுத்த நிலையை நோக்கி நகர்வதற்கு முன்னால், “தான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும்” என்ற எண்ணத்திலும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கப் பெற வேண்டுமென்ற அடிப்படையிலும் இவற்றை நான் உங்களுக்கு தொியப்படுத்த விரும்புகிறேன்.

இந்த புத்தகத்தை மற்ற புத்தகங்களைப்போல மறந்துவிடாமல் ஆரோக்கியத்தின் முறையான வழிகாட்டி என்ற எண்ணத்தோடு பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் உங்கள் மூலம் கிடைக்கப் பெற வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாகும்.

முயன்றால் மனிதனால் முடியாதது எதுவும் இல்லையென்றுதான் நான் கூறுவேன்.

இந்த ஆரோக்கிய வாழ்விற்கான புத்தகங்களை ஒவ்வொரு நபர்களும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லத் திருமணவிழா, புதுமனை புகுவிழா, பிறந்தநாள் விழா, விருந்து உபசரிப்பு விழா, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்கள் இது போன்ற முக்கிய விழாக்களுக்கு புத்தகங்களை பாிசளிக்கலாம். அதேபோல பாிசளிக்க பரிந்துரை செய்யலாம். இதுபோன்ற முறையில் உலகமக்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகைகள் ஏற்படுத்தலாம்.

அதேபோல கிராமங்களில் உள்ளவர்களுக்கும், பொரியோர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், காப்பக குழந்தைகளுக்கும், சிறியோர், பெரியோர்களுக்கும் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இதுபோன்று நபர்களுக்கு புத்தகங்களை பரிசுகளாக வழங்கிட உதவிடலாம், உதவிட பரிந்துரை செய்யலாம். நாங்கள் குறிப்பிட்ட புத்தகங்களை மேற்கூறிய நபர்களுக்கு பரிசுகளாக வழங்கப்படும்போது இலவசமாக உங்கள் சார்பாக அவர்களுக்கு எங்களால் ஆரோக்கியமான வாழ்க்கை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சியின் விளக்கங்கள் உங்கள் சார்பாக வழங்கப்படும்.

இன்றைய உலகில் புதிய புத்தகங்களும் புது, புது எழுத்தாளர்களும், நிறைய வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்த புத்தகங்கள் அனைத்தும் உலக மக்களிடம் போய் சேர்ந்ததா என்றால் அனைவாின் பதில் என்பது கேள்விக்குறிதான் என்பதால் மற்ற புத்தகங்கள் போல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் உங்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

நான் மேற்குறிப்பிட்ட இந்த மூன்று புத்தகங்களிலும் இடம் பெற்றிருக்கும் சிறப்பு வாய்ந்தவைகள் என்னவென்றால்,

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆரோக்கிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வது எவ்வாறு என்பதும், அவைகள் அனைத்தும் கிடைக்க எளிய வழி என்பதேயாகும்.

ஓவ்வொரு மனிதனும் அதிகாலையில் எழுந்து இரவு தூக்கத்திற்கு செல்லும் வரை தவறாமல் தன்னுடைய ஆரோக்கிய வாழ்விற்கு கடைப்பிடிக்க வேண்டியவைகள் அனைத்தும் இந்த புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.

எவர் ஒருவருக்கு முழுமையான ஆரோக்கிய வாழ்வு என்பது கிடைக்கப் பெறுகிறதோ அவருக்கு மற்ற இயற்கை சார்ந்த அனைத்து விஷயங்களும் மற்றும் அவருடைய அடுத்த நிலையை நோக்கி செல்வதற்கான தேடலும் மிக எளிதில் கிடைத்துவிடும் என்பது எங்களுடைய அனுபவத்தில்; நாங்கள் கண்ட உண்மையாகும்.

நாங்கள் இந்த website-யையும் மற்றும் புத்தகங்களையும் வணிக நோக்கத்தில் உருவாக்கவில்லை. எங்களுடைய முக்கிய நோக்கமானது இன்றைய உலக மக்கள் அனைவருக்கும் ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்பதே எங்களுடைய நோக்கமும் வெற்றியுமாகும். எவர் ஒருவருக்கு முழுமையான ஆரோக்கிய வாழ்வு என்பது கிடைக்கப்பெறுகிறதோ அது அவருக்கு மட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்பது கிடைத்துவிடும். முதலில் ஒரு குடும்பம் என்றும், பின்பு அதனைத் தொடர்ந்து மெல்ல, மெல்ல அந்த ஊரும், அந்த நாடும், பின்பு பின்வரும் சந்ததியினருக்கும் கிடைத்துவிடும் என்பதே எங்களுடைய நோக்கமுமாகும், வெற்றியுமாகும்.

இன்றைய உலகமக்கள் அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்பது எளிதில் கிடைத்துவிட எங்களால் உருவாக்கப்பட்ட இந்த website-ல் நீங்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ளலாம். எங்களுடைய website-ல் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கப் பெற அனைத்து விபரங்களும் எங்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் எளிய முறையில் படித்து பயிற்சிகளை கடைப்பிடிக்கலாம்.

நாங்கள் இந்த புத்தகத்தின் மூலமும், website-ன் மூலமும் கிடைக்கும் வருவாயை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு உதவிகள் புரியலாம் என்ற நோக்கத்தில் இந்த புத்தகங்களையும், website-யையும் உருவாக்கியுள்ளோம்.

நம்மால் முடிந்த உதவிகளை சில நபர்களுக்கு
உதவிகள் புரியலாம் என்ற அடிப்படையில்
சில நபர்களை குறிப்பிட்டுள்ளோம்.

தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமலும், அனைத்து உறவுகளும் இருந்தும் எந்தவிதமான ஆதரவுகளின்றி தவித்து வரும் வயதான முதியவர்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும், தாய், தந்தையரை இழந்த சிறு குழந்தைகளுக்கும் உதவிகள் செய்யவும்.

ஒருவருக்கு உயிரும் உடலும் இருந்தும் அவரைச் சுற்றி நடக்கும் எந்தவிதமான விபரங்களையும், செயல்களையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள்.

சிறு குழந்தைகளின் கல்விக்காகவும் மற்றும் தன்னிடம் நிறைய திறமைகள் இருந்தும் அதை வெளிக் கொண்டு வரமுடியாமல் இருப்பவர்களுக்கும் இவர்களைப் போன்று மேலும் பலர் உள்ளனர்.

ஆன்மீகத் தேடலும், சித்தர்களின் தேடலிலும் கடவுளின் தேடலிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள்.

நாங்கள் மேற்குறிப்பிட்ட இவர்களைப் போன்று மேலும் பலர் உள்ளனர். அவர்களைக் கண்டு நாங்கள் அவர்களுடைய இடத்திற்கே தேடிச்சென்று உதவிகள் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த புத்தகங்களையும், website-யையும் உலக மக்களுக்காக நாங்கள் சமர்ப்பிக்கின்றேhம்.

நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய விரும்பினால் நீங்களும் உங்களுடைய வசதிக்குத் தகுந்தாற்போல் மற்றும் உங்களின் விருபத்தின் அடிப்படையிலும் உதவிகள் புரியலாம். நீங்கள் விரும்பி செய்யப்போகும் உதவித் தொகையானது ரூபாய் 1/-  (ஒன்றாக) இருந்தாலும் அதை நாங்கள் உங்கள் உதவியுடன் சரியான முறையில் பயன்படுத்துவோம்.

இந்த புத்தகத்தை படிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நல்ல நண்பர்களுக்கும், இந்த புத்தகத்தை வாங்க விரும்பினாலோ அல்லது உதவிகள் செய்ய ஏதும் விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பணபரிவர்த்தனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Paytm Account வாயிலாகவும் பணம் transfer பண்ணலாம்.
Paytm Number : 98421 84141

Bank Account வாயிலாகவும் பணம் transfer பண்ணலாம்.
Name:  S.KRISHNAMOORTHY
Current Accoun tNumber:  35468767692
State  Bank:  P.C.Patti, Theni Branch
IFSC code:  SBIN 0013834

இந்த புத்தகங்களை வாங்க வேண்டுமென்று விரும்புவர்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ கிடைக்க வழிவகைகள் செய்யப்படும்.