மெய்ப்பொருள் காண்பது அரிது

ஆரோக்கிய வாழ்வும்

ஆன்மீக தெளிவும்

கடவுளின் தேடலும்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எல்லோரும் நன்கு அறிந்த குறள்தான்.  எதை யார் சொன்னாலும் அதன் உண்மையான பொருளை உள்நோக்கிச் சென்று காண்பதின் அா்த்தமே “மெய்ப்பொருள் காண்பது அறிவு”.

இவ்வுலகில் மனிதனாக பிறக்கப் பெற்றவர்கள் அனைவரும் மிகுந்த அறிவு ஆற்றலும் உடையவர்கள். தனக்குள்பலவிதமான திறமைகளையும்,  சக்திகளையும் கொண்டுள்ளவர்கள்.

இவ்வுலகில் மனிதனாக பிறக்கப்பெற்றவர் முதலில் தன் மனதை அறிந்து,  பின்  தன்னை அறிந்து கொண்டும், தன்னை உணர்ந்தும் பின்பு இறையை அறிந்ததும்  இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பதே நமது முன்னோர்களின அறிவுரைகளாகும்.

கடவுள் என்பவர் உனக்குள் இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பு

கடவுள்
கடவுள் [கட ] : கதவு என்று பொருளாகும்.
கடவுள் [வுள்] : வுள் என்பது உனக்குள் என்று பொருளாகும்.

கடவுள் என்பவர் உனக்குள் இருக்கிறார். அதை நீ முதலில் தேடு என்கிறார்கள்.  தன்னைத் தேடத் தொடங்கினால்தான் தன் நிலையை உணர முடியும் என்றும்,  தன்னை அறிந்த பின்புதான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்றும் கூறுகிறார்கள்.

ஆக இதன்மூலம் உண்மையான மெயப்பொருள் காண்பது என்பது அரிது என்றேதான் நான் கூறுவேன். ஏனென்றால் உண்மையான மெய்ப்பொருளை தெரிந்து கொண்டால் இப்பிறவிப் பலனை அடைந்துவிடலாம் என்பதே என்னுடைய கருத்துக்களாகும்.

ஆக இதன்மூலம் மெய்ப்பொருளை காண்பது அரிது என்பதை உணர்ந்து கொண்டேன்.

என்னுடைய தேடுதலில் எனக்கு கிடைக்கும் முதல் வெற்றி என்பது இதில் நான் எடுத்து வைக்கும் இந்த முதல்படிதான். இந்த முதல்படியில் நுழைவதற்காக நான் தேடிய தேடல் என்பது மிகவும் கடினமானது என்றேதான் நான் கூறுவேன். நான் முதல் படியின் நுழைவு வாயிலில் சென்றபின்புதான் தெரிந்து கொண்டேன். பல லட்ச படிகளும் பலகோடி படிகளும் எண்ணிலடங்காத படிகளும் இங்கு உள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

என்னுடைய தேடலில் நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன். எங்களோடு  நீங்களும் கலந்து தேடுதலை தொடங்கிடுவோம்.

இயற்கையோடு இணைந்திடுவோம்!
ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கிடுவோம்!

kannivadi malai somanathar temple

Karnataka Chandramouleshwara Temple

kasavanampatti mouna guru

kathankanni sivan temple

kulandai ananda swami madurai

sathuragiri temple trip

Shri Siddharoodha Swamy Math, Hubli-Dharwad Karnataka

thiruvannamalai temple

vellingiri malai hills trip