என்னைப் பற்றி

மெய்ப்பொருள் காண்பது அரிது
ஆரோக்கிய வாழ்வும்
ஆன்மீக தெளிவும்
கடவுளின் தேடலும்

நானும் என்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் மற்றும் உலக வாழ்க்கையிலும் பல வருடங்களாக பலவிதமான துன்பங்களையும், தோல்விகளையும் அனுபவித்து வருகிறேன். நான் ஏன் இந்த உலக வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் தோல்விகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகிறேன் என்றும், அதை நினைத்து மிகுந்த மனவேதனையும், மனக் கஷ்டத்தையும் அனுபவித்து வந்தேன். நான் ஏன் இந்த உலக வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் பலவிதமான இன்னல்களையும், தோல்விகளையும் எதிர்கொண்டு வருகிறேன் என்ற அடிப்படையில் தேடத் தொடங்கினேன். நான் தேடத் தொடங்கியதின் பலனாக முதலில் இந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்பங்கள் – துன்பங்கள் – லாபங்கள் – நஷ்டங்கள் என்பது போன்ற அனைத்து விஷயங்களும் கர்மாவின்படியும், விதிப்படியும் நடந்து வருகிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அதற்கு பின்பு என் மனதை பக்குவப்படுத்த பழகிக் கொண்டேன். என்னுடைய தேடுதல் என்பது ஒரு புரிதலுடன் இருந்தது.

நான் மேலும் தேடத்தொடங்கியதில் இந்த உலக வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்பதை புரிந்து கொண்டேன். என்னால் இந்த உலக வாழ்க்கையில் முழுவதும் திருப்தி அடைய முடியாமல், உலகவாழ்க்கைக்கு மேல் என்ன உள்ளது? தேடினால் என்ன கிடைக்கும்? என்ற அடிப்படையில் தேடத் தொடங்கினேன். மேலும் இந்த உலகமக்களுக்கு வரும் இன்ப-துன்பங்களை தெரிந்து கொள்வதற்கும், மனித பிறப்பின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஆசைப்பட்டு பல இடங்கள், பலகோவில்கள், பல மலைகள் என்ற அடிப்படையில் தேடத் தொடங்கினேன்.

நான் தேடத் தொடங்கியதின் பலனாக, நமது முன்னோர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறைகளும், அவர்களுடைய கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு தேடத் தொடங்கினேன். தேடத்தொடங்கியதின் பலனாக நமது முன்னோர்களான சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிமார்கள் இதுபோன்ற மேலும் பலர் உள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்தும் வருகிறார்கள் என்ற அடிப்படையில் நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைகளும், அவர்களுடைய அறிவுரைகளும், அவர்களுடைய பாடல்களும், அவர்களால் விட்டுச்சென்ற பொருட்கள், அவர்கள் வாழ்ந்து சென்ற இடங்கள் போன்றவைகளை நான் பார்த்தும், படித்தும் தெரிந்து கொண்டேன். என்னுடைய தேடுதலில் எனக்கு கிடைக்கும் வெற்றி என்பது இதில் நான் எடுத்து வைக்கும் இந்த முதல்படிதான். இந்த முதல்படியில் நுழைவதற்காக நான் தேடிய தேடல் என்பது மிகவும் கடினமானது. நான் முதல்படியின் நுழைவு வாயிலில் சென்ற பின்புதான் தெரிந்து கொண்டேன் இங்கு பல லட்சம் படிகளும், பலகோடி படிகளும், மற்றும் எண்ணில் அடங்காத படிகளும் உள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

என்னுடைய தேடுதலில் எனக்கு கிடைக்கும் முதல் வெற்றி என்பதும், என்னுடைய முதல் வெற்றியே . இவ்வுலகிற்கு கடவுளின் படைப்பான மனித இனம் மிக முக்கியமானது என்றும், மனித உயிர் என்பது (உயிர் + மனிதஉடல்) என்ற இந்த இரண்டும் சேர்ந்து படைக்கப்பெற்றதுதான் மனிதர்களாகிய நாம் அனைவரும் என்பதை புரிந்து கொண்டேன். மனிதர்களாகிய நாம் அனைவரும் மிக அறிவும், ஆற்றலும் உடையவர்கள். நம்மிடம் பல திறமைகளும், பலவிதமான அற்புத சக்திகளும் உள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அப்பேர்ப்பட்ட மனித இனம் இவ்வுலகிற்கு ஏன் வந்தது? என்றும், எங்கே போகிறோம்? என்றும், என்ற அடிப்படையில் என்னுடைய ஊழ்வினை தூண்டியதின் மூலமாக அந்த சூட்சம விஷயத்தை அறிய வேண்டும் என்று எண்ணினேன். அதன் அடிப்படையிலே என்னுடைய தேடுதலின் ஆரம்பம்தான் இதுவாகும் என்பதை நான் கூறிக் கொள்கிறேன்.

“என்னுடைய நன்றியெல்லாம் என்னை மனித பிறப்பாக படைத்தவர்களுக்கே. நான் முதலில் இவ்வுலகில் மனித பிறப்பாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன்.”

என்னை இவ்வுலகிலும், இந்தியத் திருநாட்டிலும் மற்றும் நம் முன்னோர்களான சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், சான்றோர்கள் இதுபோன்ற மகா மேதைகள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மற்றும் என்னுடைய தாய்திருநாட்டின் பன்மை வாய்ந்த மற்றும் பல்வேறு சிறப்புக்களையும், பெருமைகளையும் உடைய தமிழ்நாட்டில் பிறந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

என்னுடைய முன்னோர்கள் மற்றும் குருமார்கள் மற்றும் தாய்,தந்தையர்கள், என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆசீர்வாததத்தோடும், ஆதரவோடும் இந்த உரையை உலக மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.
நன்றி வணக்கம்.

Natural Interester
S.Krishna Moorthy
Book Author and
Healthy Life Advisor

என்னுடைய தேடலில் என்னை போன்று மேலும் பலர் உள்ளனர்


கடவுளின் தேடலில்…………..
கிருஷ்ணாவின் தேடல் …………..

இயற்கையோடு இணைந்திடுவோம் !
ஆரோக்கியமான வாழ்க்கையை
உருவாக்கிடுவோம்!